search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரி டிரைவர் கைது"

    தொண்டி அருகே தகராறில் வாலிபரை குத்திக்கொலை செய்த லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
    தொண்டி:

    தொண்டி அருகே உள்ள தெற்கு ஊரணங்குடியை சேர்ந்தவர் மாரி. இவரது மகன் ராமு (வயது32). இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் உப்பூருக்கு சென்றார். அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் அவர் நின்றிருந்தபோது 2 லாரி டிரைவர்கள் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது ராமு அவர்களை சமரசப்படுத்த முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த நெய்வேலி வடக்கு மேலூரைச் சேர்ந்த லாரி டிரைவர் சந்தோஷ்குமார் (45) என்பவர் ராமுவை அடித்ததாக தெரிகிறது. மேலும் லாரியில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து ராமுவை தாக்கினார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே ராமு பலியானார்.

    இது குறித்த புகாரின் பேரில் திருப்பாலைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோஷ்குமாரை கைது செய்தனர்.
    அண்ணா நகரில் கரூர் வைஸ்யா வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    அம்பத்தூர்:

    அண்ணாநகர் ஏ.ஏப். பிளாக்கில் கரூர் வைஸ்யா வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இன்று அதிகாலை 3 மணிக்கு வாலிபர் ஒருவர் இரும்பு கம்பியால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொண்டிருந்தார்.

    சத்தம் கேட்டு அப்பகுதியை சேர்ந்தவர் ஏ.டி.எம். மையத்தை வாலிபர் ஒருவர் உடைப்பதை பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அண்ணாநகர் ரோந்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    போலீசாரை பார்த்ததும் வாலிபர் தப்பி ஓடினார். அவரை பிடிக்க போலீசார் விரட்டி சென்றனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் அந்த வாலிபர் பதுங்கி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து மடக்கி பிடித்தனர். அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    இதில் அவர் சேலம் மாவட்டம் கெங்கைவல்லியை சேர்ந்த சங்கர் என்பதும், சென்னை நியூ ஆவடி சாலையில் உள்ள குடிநீர் வாரிய நீரேற்று நிலையத்தில் ஒப்பந்த லாரி டிரைவராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

    கைது செய்யப்பட்ட சங்கர் வேறு எங்காவது ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட்டாரா என்று விசாரித்து வருகிறார்கள். #tamilnews
    இண்டூர் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி மண் கடத்தி வந்த லாரி டிரைவரை கைது செய்தனர்.
    இண்டூர்:

    தர்மபுரி மாவட்டம், இண்டூர் பகுதியில் அனுமதியின்றி செம்மண் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னசாமி மற்றும் போலீசார் தருமபுரி-பென்னாகரம் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக அனுமதியின்றி டிப்பர் லாரியில் செம்மண் கடத்தி வந்த டிரைவர் முருகன் (வயது 39), லாரியின் உரிமையாளர் முனுசாமி ஆகிய 2 பேர் மீது வழக்குபதிவு செய்து முருகனை கைது செய்தனர். தலைமறைவாகி உள்ள முனுசாமியை போலீசார் தேடி வருகிறார்கள். பின்னர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.      
    லாரியில் உரிய அனுமதியின்றி ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மணல் கடத்தி வந்த டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரில் உள்ள ஒருங்கிணைந்த நவீன சோதனைச்சாவடியில் சப்இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த லாரி ஒன்றை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.

    அந்த லாரியில் உரிய அனுமதியின்றி ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து லாரி டிரைவர் பெரியபனங்காடு கிராமத்தைச்சேர்ந்த ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் மணலுடன் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மணல் கடத்தப்படுவது எப்படி? இதன் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். #tamilnews
    காஞ்சீபுரம் அருகே லாரி ஏற்றி தொழிலாளி கொலை செய்த வடமாநில டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

    காஞ்சீபுரம்:

    வெளிமாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு பொருட்களை ஏற்றி வரும் லாரி டிரைவர்கள், தமிழக எல்லைக்கு வந்ததும் தங்களுக்கு வழிகாட்டு வதற்காக ஒருவரை தங்களுடன் அழைத்து வருவது வழக்கம்.

    நேற்று, கொல்கத்தாவில் இருந்து இருசக்கர வாகனங்களை ஏற்றுக் கொண்டு ஒரு லாரி காஞ்சீபுரம் வந்தது. இதை தரண்ஷானி (34) என்பவர் ஓட்டி வந்தார்.

    சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் வந்த இந்த லாரி காஞ்சீபுரம் அருகே உள்ள பாலுசெட்டி சத்திரம் என்ற இடத்தில் நின்றது. அதை ஓட்டி வந்த டிரைவர் காஞ்சீபுரத்தில் உள்ள ஷோரூம் செல்வதற்கு வழிகேட்டார்.

    அப்போது, துலுங்கும் தண்டலம் கிராமத்தை சேர்ந்த தொழிலாளி கங்கன் (55) என்பவர் வழிகாட்டு வதற்காக லாரியில் ஏறினார். அதற்கு பணம் தர வேண்டும் என்று கூறினார்.

    இதையடுத்து, அவர் அந்த லாரியில் சென்று இருசக்கர வாகனங்களை இறக்க வேண்டிய கடையை கட்டினார். லாரி புறப்படும் போது தனக்கு தர வேண்டிய பணத்தை கேட்டார். அப்போது டிரைவருக்கும் கங்கனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பணம் தராவிட்டால் லாரியை விடமாட்டேன் என்று கங்கன் லாரியை வழிமறித்தார். அப்போது டிரைவர் தரண் ஷானி அவர் மீது லாரியால் மோதினார். இதில் கங்கன் அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார்.

    தகவல் அறிந்ததும், பாலு செட்டி சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகான் சம்பவ இடம் சென்று வழக்கும் பதிவு செய்தார். டிரைவர் லாரியை ஒரு கிலோ மீட்டர் தூரம் ஓட்டிச் சென்று ரோட்டிலேயே நிறுத்திவிட்டு தப்பி விட்டார்.

    போலீசார், அருகில் உள்ள கிராமத்தில் பதுங்கி இருந்த டிரைவர் தரண்ஷானியை கைது செய்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.

    ஓமலூர் அருகே முன்னாள் ராணுவ வீரர் விபத்தில் பலியானார். லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    காடையாம்பட்டி:

    ஓமலூரை அடுத்த மோட்டூர் பச்சனம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன்(56). இவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். நேற்று இவர் சொந்த வேலை காரணமாக பூசாரிபட்டி வந்து விட்டு மோட்டார் சைக்கிளில் ஓமலூர் திரும்பினார். அக்போது பூசாரிபட்டி சரபங்கா ஆற்று பாலம் அருகே செல்லும் போது  தர்மபுரியிலிருந்து சேலம் நோக்கி வந்த கண்டெய்னர் லாரி இவர் மீது மோதியது. 

    இதில் இவர் பலத்த காயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். 

    இந்த விபத்து குறித்து தீவட்டிபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து சிவகங்கை மாவட்டம், உதயவயலை சேர்ந்த டிரைவர் ஆறுமுகத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    லாரி விபத்தில் 2 பர் பலியானார்கள். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    நாகர்கோவில்:

    மார்த்தாண்டம் அருகே புதுக்கடை குழிஞ்ஞன்விளையை சேர்ந்தவர் நடராஜன் (வயது 30), தொழிலாளி. இவருடைய அண்ணன் ரமேசுக்கு வருகிற 12-ந்தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதையொட்டி உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ்களை நடராஜன் கொடுத்து வந்தார்.

    அவர் உதச்சிக்கோட்டை அரசு நடுநிலைப்பள்ளி பகுதியில் உள்ள உறவினருக்கு அழைப்பிதழ் கொடுத்து விட்டு வந்தார். அதே பகுதியை சேர்ந்த தங்கராஜ் (70) என்பவரை பார்த்ததும் அவர் அருகில் நடராஜ், ஸ்கூட்டரில் சென்றார். அவர்கள் இருவரும் சாலையோரத்தில் திருமண ஏற்பாடுகள் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக காப்புக்காடு உணவு குடோனில் இருந்து அரிசி மூடைகளை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி நடராஜன், தங்கராஜ் மீது  பயங்கரமாக மோதியது. இதில் இருவரும் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.

    மேலும் விபத்தை ஏற்படுத்திய லாரி நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்ததால் அதில் இருந்த அரிசி மூடைகள் சாலையில் விழுந்தன. விபத்து நடந்ததும் லாரியை ஓட்டி வந்த சூரியகோடு பகுதியை சேர்ந்த அஜித்குமார் (35) தப்பி ஓடிவிட்டார். லாரியில் இருந்த மூடை தூக்கும் தொழிலாளர்கள் 2 பேருக்கு காயம் ஏற்பட்டது

    விபத்து பற்றி கேள்விப்பட்டதும். புதுக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பலியானவர்களது உடல்களை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் இதுபற்றி வழக்கு பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவர் அஜித்குமாரை கைது செய்தனர். அவரிடம் விபத்து பற்றி விசாரணை நடந்து வருகிறது.
    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே மணல் கடத்தி சென்ற லாரியை போலீசார் விரட்டி சென்று மடக்கினர். மேலும் டிரைவரை கைது செய்தனர்.
    முஷ்ணம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் மணல்பேடு பகுதி கொள்ளிடம் ஆற்றிலிருந்து திருட்டுத்தனமாக லாரியில் மணல் எடுத்துக் கொண்டு செல்வதாக காட்டுமன்னார்கோவில் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் காட்டுமன்னார்கோவில் அருகே மோவூர் பகுதி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை சந்தேகத்தின் பேரில் போலீசார் நிறுத்த முயற்சித்தபோது டிரைவர் லாரியை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிசென்றார்.

    உடனே போலீசார் மோட்டார் சைக்கிளில் 2 கிலோமீட்டர் தூரம் விரட்டி சென்று லாரியை மடக்கினர். அந்த லாரியில் நாகப்பட்டினம் கொள்ளிடம் ஆற்றிலிருந்து திருட்டுத்தனமாக மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. உடனே லாரியை ஓட்டிவந்த குமராட்சி ஒன்றியம் இளங்காப்பூர் பகுதியை சேர்ந்த டிரைவர் கருணாகரனை கைது செய்தனர். லாரியை பறிமுதல் செய்தனர். போலீசார் விரட்டி சென்று லாரியை மடக்கி பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    தக்கலை அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மணல் கடத்தலை தடுத்த சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த டிரைவரை கைது செய்தனர்.
    தக்கலை:

    தக்கலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது சித்திரங்கோட்டில் இருந்து நாகர்கோவில் நோக்கி ஒரு டாரஸ் லாரி வேகமாக வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த லாரியை தடுத்து நிறுத்தினார்கள். அந்த லாரியை செண்பகராமன் புதூரை சேர்ந்த டிரைவர் வெங்கடேஷ் ஓட்டிவந்தார்.

    மேலும் அந்த லாரியில் போலீசார் சோதனை செய்த போது அதில் ஆற்று மணல் இருந்தது தெரியவந்தது. ஆனால் ஆற்று மணலை கொண்டு செல்வதற்கான முறையான ஆவணங்கள் எதுவும் லாரி டிரைவர் வெங்கடேசிடம் இல்லை.

    இதைதொடர்ந்து மணல் கடத்திய லாரியையும், அதன் டிரைவர் வெங்கடேசையும் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்ல போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

    அப்போது டிரைவர் வெங்கடேஷ் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் சப்-இன்ஸ்பெக்டர் ரமேசுக்கு அவர் கொலை மிரட்டலும் விடுத்தார். இதுபற்றி தக்கலை போலீசில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் புகார் செய்தார். இதைதொடர்ந்து லாரி டிரைவர் வெங்கடேசை போலீசார் கைது செய்தனர். மணல் கடத்திய லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.
    பண்ருட்டி அருகே கரும்பு தோட்டத்தில் இளம்பெண்ணை கற்பழித்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ஆ.நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 28), லாரி டிரைவர். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

    மோகன்ராஜுக்கு அந்த பகுதியில் விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்துக்கு அவர் சென்றிருந்தார். அப்போது அவரது நிலத்தின் அருகே 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் மாடு மேய்த்து கொண்டிருந்தார்.

    அந்த பெண்ணை, மோகன்ராஜ் குண்டுக்கட்டாக அருகில் உள்ள கரும்பு தோட்டத்துக்கு தூக்கி சென்றார். அங்கு வைத்து அவரை கற்பழித்தார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இது குறித்து அந்த இளம்பெண் தனது பெற்றோரிடம் கூறினார். உடனடியாக அவர்கள் ஊர் பஞ்சாயத்தில் கூறினர். ஊர் பஞ்சாயத்தார், மோகன்ராஜை பிடித்து விசாரித்த போது, அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதை ஒப்புக்கொண்டார்.

    உடனே அந்த பெண்ணை நீதான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மோகன்ராஜியிடம் ஊர் பஞ்சாயத்தார் கூறினர். அதற்கு அவர் சம்மதம் தெரிவித்து விட்டு சென்றார்.

    இந்த நிலையில் மோகன்ராஜ் திடீரென்று மாயமாகி விட்டார். இது பற்றி தகவல் அறிந்த இளம் பெண்ணின் தந்தை புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். தலைமறைவாகி இருந்த மோகன்ராஜை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
    மது போதையில் நடந்த சண்டையை விலக்க சென்றவருக்கு காது துண்டானது. இதில் அலறி துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    லாலாபேட்டை:

    லாலாபேட்டையைச் சேர்ந்த ராஜகோபாலன் மகன் அசோக்( 23) லாரி டிரைவர். இவரது மனைவி பிரியா. இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி கீதா. சம்பவதன்று அசோக் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தனது மனைவி பிரியாவை தாக்கி தகராறு செய்தார். இதைத் பக்கத்து வீட்டை சேர்ந்த கீதா அங்கு சென்று அசோக்கை கண்டித்தார். உடனே அசோக் கீதாவை தாக்க முயன்றார்.

    அங்கிருந்து வெளியே வந்த கீதா இது குறித்து தனது அண்ணன் மெக்கானிக் அருண்குமாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே அங்கு வந்த அருண்குமார் இது குறித்து அசோக்கிடம் தட்டிக் கேட்டார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த அசோக், அருண்குமாரின் காதை கடித்து துண்டாக்கி விட்டார். இதில் அலறி துடித்த  அருண்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து லாலாபேட்டை போலீஸ் வழக்கு பதிவு செய்து அசோக்கை கைது செய்தனர்.
    ×